பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர கோரிய மனு தொடர்பாக 4 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் ஒரே விலையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரியும், ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால் விலை கணிசமாக குறையும் எனவும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சி.கனகராஜ் உயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வு, இது தொடர்பாக 4 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.