உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கவுசல்யாவின் தந்தையை சென்னை உயர்நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்த்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துச்சாமியிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், செயலாளர் த.கன்னியப்பன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்