tamilnadu

img

பொது மக்கள் எதிர்ப்பால் மதுபானக் கடை மூடல்

செஞ்சி, மே 29- செஞ்சி அருகே மதுபானக் கடையை திறப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடை மூடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஊருக்கு வெளிப்புறத்தில் ஒரு கடையும், ஊரின் மையப் பகுதியில் ஒரு கடை என இரண்டு கடைகள் உள்ளன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக இரண்டு கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் கடைகள் திறக்கப்பட்டன. ஊரில் உள்ள கடையை திறக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடையை திறக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அந்த கடையை திறக்க விற்பனை யாளர்கள் 2 பேர் வந்திருந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் கடையை  திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் பொது மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதனம் செய்தனர். இதையடுத்து மதுக்கடையை திறக்காமல் விற்பனையாளர்கள் திரும்பி சென்றனர். கிராமத்திற்குள் உள்ள இந்த டாஸ்மாக் கடையை அரசு நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.