tamilnadu

img

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

 சென்னை,ஜூன் 24- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28 ஆம்  தேதி தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், குடிநீர் பிரச்சனை, சட்டமன்ற கூட்டத்  தொடரை எதிர்கொள்வது, துறை வாரியாக அறிவிப்பு களை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படு வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம்  நடைபெற்ற, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களில், தொழில் தொடங்க தயார் நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு,  மற்ற சலுகைகள் அளிப்பதற்கான ஒப்புதல் ஆகியவை குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 7 துறைகளுக்கான திட்டங்களை, காணொலிக்  காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்  செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கோவை மாவட்டம் ஆனைக்கட்டி யில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை  முதலமைச்சர் திறந்து வைத்தார். ஈரோடு பெருந்துறை, காஞ்சி புரம் செய்யூர், வேலூர் மாவட்டம் நெமிலி மற்றும் ஆம்பூரில்  நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளும் திறந்து வைக்கப்பட்டன. கடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு மையக் கட்டிடம், தருமபுரி பாலக்கோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.  கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல மைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, அந்தந்த  துறைகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர்  கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.