tamilnadu

img

பா.கருணாநிதி தாயார் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

பா.கருணாநிதி தாயார்  உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை, அக். 7- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதியின் தாயார் பா.திலார்த்தம்மாள் (90) வயது மூப்பின் காரணமாக திங்கட்கிழமை (அக். 6) காலை 11.30 மணியளவில் காலமானார். ஆர்.கே.நகர் வஉசி நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நா.பெரியசாமி, டாக்டர் ரவீந்திரநாத், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகி கள் எம்.செல்வானந்தம், சி.சேகர், ஆர்.ஜெயச் சந்திரன், எஸ்.மேரி, டி.ஜெயன், தருமன், சிபிஐ மாவட்டச் செயலாளர் வேம்புலி வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் செவ்வாய்க்கிழமை (அக்.7) காலை 10 மணிய ளவில் காசிமேட்டில் உள்ள மயானத்தில் எரி யூட்டப்பட்டது.