சென்னை:
ஊரடங்கு காலத்தில் வழக்கறிஞர்கள் தங்கள்அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்கக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்காணொலி மூலம் வழக்கில் ஆஜராகும்வசதியை வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் தான் செய்திருப்பதால் அவர்கள் செல்வதை தடுக்கக் கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகத்தை திறக்கச் செல்லும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை காண்பிக்கும்பட்சத்தில் அனுமதிக்க வேண்டும்.தமிழக அரசு அறிவித்துள்ள முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றை வழக்கறிஞர்கள் பின்பற்றுவார்கள் என்றும் தலைவர் அமல்ராஜ் உறுதியளித்துள்ளார்.