tamilnadu

img

கு.க.செல்வம் எம்எல்ஏ சஸ்பெண்ட்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட  கு.க.செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர் மதியை தோற்கடித்தார். இவர் திமுக தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார்.தில்லி சென்ற  எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த கு.க.செல்வம், “நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு மின் தூக்கி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்ததாகவும் பாஜகவில் இணையவில்லை என்றும் தெரிவித்தார்.மேலும், மோடியை புகழ்ந்து பாராட்டியதுடன், என் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வேன் என்றும் சவால் விடுத்திருந்தார்.இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய் துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்துடன், கட்சி பொறுப்புகளில் இருந்தும் செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார்.