tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக     முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பால், தமிழக அரசுக்கு  கூடுதலாக ரூ.6,000 கோடி செலவாகும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.