சென்னை:
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் மற்றும் நகைக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கையில் முதல்வர் பழனிசாமி உடனடி அக்கறை காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள வறுமைக்கோட் டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். மோடி அரசு இதைப் பின்பற்றாததால் தற்போது மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றார்.