பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கைவிட வேண்டும்
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கைவிட வேண்டும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டும், சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.7) நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஒருமைப்பாடு இயக்கம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கிளைத் தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர்நீதி, செயலாளர் ச.ஆனந்தகுமார், கிளை செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.