தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடிகர் விஜயகாந்த்தின் டிரஸ்ட் 5,52,73,825 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் கடனை திரும்ப செலுத்தாததால் விஜயகாந்த்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, சாலிகிராமத்தில் உள்ள வீடு ஆகிய சொத்துகளை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர் சீஸ் வங்கி அறிவித்துள்ளது.