tamilnadu

img

ஆதரவு திரட்டி வரும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்...

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியை தனியார்மயமாக்குகிற முயற்சிகளை எதிர்த்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மக்கள் கருத்தை திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன் (விசிக), நவாஸ் கனி (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), எஸ்.ஆர்.பார்த்தீபன் (திமுக), சண்முகசுந்தரம், என்.ஆர். இளங்கோ (திமுக), நவநீதகிருஷ்ணன் (அதிமுக), சண்முகம், டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) ஆகியோரை சந்தித்து நாடாளுமன்றத்தில் தனியார்மய முயற்சிகளுக்கு எதிராக குரல் எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர்.