tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை,அக்டோபர்.10- சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களை காவல்துறை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை, திருப்பூர், உடுமலை ஆகிய இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.