tamilnadu

img

லலிதா ஜூவல்லரியில் வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லலிதா ஜூவல்லரி மீதான வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில்  50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.