போரூர், மே 27-கீழ்பாக்கம் காவல் குடியிருப்பில் உள்ள 6 ஆவதுபிளாக்கில் வசித்து வருபவர்ஜெயச்சந்திரன். இவரது மனைவி அருணா (44). இவர்கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று (மே 27) காலை பணிக்கு செல்வதற்காக உடை மாற்ற அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் ஜெயச்சந்திரன் கதவை திறந்து பார்த்தபோது அருணா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பணிச்சுமை காரணமாக அருணா தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.