சென்னை:
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 விழுக்காடு நியமனம் அனைத்தும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் அறிவித்தார்.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தமது துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசுகையில்,“ கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பணிகளுக்கானபோட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும்” என்றார். அதுபோன்று அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில், “வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிகளில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்”எனவும் கூறினார்.