சென்னை,ஆக.09- நடப்பு கல்வியாண்டு முதலே மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வாலிபர் மற்றும் மாணவர் சங்க சிறப்பு மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஓபிசி மாண வர்களுக்கான இட ஒதுக்கீடு உரிமை மாநாடு இணையம் வழியாக ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாணவர் சங்கத் தின் மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநாட்டில் மாநி லங்களவை உறுப்பினர் பி.வில்சன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க த்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா, நிர்வாகிகள் சி.பால சந்திர போஸ், கார்த்திஷ் குமார், மனோ, மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நிருபன் சக்கரவர்த்தி, கண்ணன், பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங் களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப் பட வேண்டிய 50 சதவீத இடங்களை வழங்க மத்திய அரசு மறுத்து துரோகமிழைத்து வருகிறது. மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 15 சதவீத இடங்களை யும் முதுகலை படிப்புகளில் 50 சதவீத இடங்களை யும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களிலுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்ப வேண்டுமென மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மாக 69 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அகில இந்திய அளவில் இடங்களை நிரப்பும்போது, மாநில இட ஒதுக்கீடு கொள்கையின்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை.
மேலும் மத்திய அரசின் ‘2006 ஆம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம்’ கூறுவதுபடி 27 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப் படவில்லை. 2019ஆம் ஆண்டின் முதுநிலை இடங்களில் 8137 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப் பட்டன. அதில் மத்திய அரசு வழங்கும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினால் கூட, 2197 இடங்கள் இதர பிற்படுத்தப்பட் டோருக்குக் கிடைக்கும். ஆனால், மாநில அரசுகளும் தனியாரும் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 224 இடங்களே பிற்படுத்தப் பட்டோருக்குக் கிடைத்தன. ஆகவே பிற்படுத்தப்பட்டோர் 1973 பேர் தங்களது வாய்ப்பு களை இழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 425 இடங்கள் கிடைக்காமல் போனது.
இதேபோல இளநிலை மருத்துவப் படிப்பு களில் 395 இடங்கள் கிடைக்காமல் போனது. ஆகவே, மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை யின்படி 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும். மாநில அரசு ஒதுக்கும் இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று ஓபிசி மாண வர்கள் இடஒதுக்கீடு உரிமை மாநாடுகோருகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங் களில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடை உறுதிசெய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாண வர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து பிரிவினருக்குமான 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் அமலாக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.