tamilnadu

img

மழைக்காக யாகம் நடத்த இந்து அறநிலையத்துறை சுற்றறிக்கை - பொதுமக்கள் அதிர்ச்சி


மழைக்காக தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்து அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் மழைக்காக யாகம் நடத்த கோவில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மழைபெய்து நாடு செழிக்க வேண்டி அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள முக்கிய கோவில்களில் யாகம் நடத்த அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள நந்தியை சுற்றி தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர்நிரப்பி வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களுடன் அமிர்த வர்ஷினி, மேக வர்ஷினி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் வழிபாடு செய்யவும், விஷ்ணு கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. வருண காயத்ரி, வருண சூக்த வேத மந்திரங்களை பாராயணம் செய்யவும் கோயில்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறை ஓதுதல் மற்றும் பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து அபிஷேகம் நடத்துதல் போன்றவற்றிற்கும் உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் யாகம் நடத்தப்பட உள்ளது என்ற பட்டியலை இந்து அறநிலையத்துறை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.  


யாகம் நடத்தினால் மழை வரும் என்று அறிவியல் பூர்வமாக இதுவரை நீரூபிக்கப்படவில்லை.

மேலும் அரசு சார்பாக எந்த ஒரு மதத்தின் அடிப்பைடயிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படாலும் அரசியல் அமைப்பு சாசனத்திற்கே எதிரானது என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.