tamilnadu

img

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.19- அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. தற்போதைய மழை 2, 3 நாட்க ளுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு  மைய இயக்குநர் பாலச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள வானிலை அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக் கடலிலும், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளி மண்டல சுழற்சி, தெற்கு ஆந்திர கட லோரப் பகுதி வரை நீடிப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதேபோல, கிழக்கு மத்திய வங்கக் கடல்  மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும்  24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாக வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச் சேரி, காரைக்காலில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே கன மழையும் பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ  மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்ப தால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.