states

img

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ள நிலையில் டிசம்பர் 3-ஆம் தேதி புயல் உருவாகி, டிசம்பர் 5-ஆம் தேதி ஆந்திராவில் கரையைக் கடக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை,அரியலூர்,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.