சென்னையில் திடீரென கனமழை பெய்துவருவதால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எம்ஆர்சி நகர் 3 செ.மீ., நுங்கம்பாக்கம் 12 செ.மீ., நந்தனம் 8 செ.மீ., மீனம்பாக்கம் 5 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. அதனைதொடர்ந்து அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.