tamilnadu

img

கும்மிடிப்பூண்டி  ராஜேந்திரன் தாயார் காலமானார்

கும்மிடிப்பூண்டி  ராஜேந்திரன் தாயார் காலமானார்

திருவள்ளூர், அக்.6- சிபிஎம் திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினரும், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவருமான இ.ராஜேந்திரனின் தாயார் இ.சரோஜம்மாள் (90), வயது மூப்பு காரணமாக கும்மிடிப்பூண்டி நத்தம் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிறன்று இரவு காலமானார்.  அவரின் உடலுக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் எஸ் கோபால், செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.சூரியபிரகாஷ், அ.து.கோதண்டன்,  ஏ.பத்மா, இ.தவமணி, மூத்த தோழர் கே.செல்வ ராஜ்,  அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பி.ஜெயநாரா யணன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.தவிச  மாநில செய லாளர் பி.துளசிநாராயணன் தொலைபேசி மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார். நத்தம் கிராமத்தில் உள்ள மயா னத்தில் திங்களன்று மாலை சரோஜம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது.