tamilnadu

முகக்கவசம் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம்....

சென்னை:
முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு,மேலும் இந்த 15 மருத்துவப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, என்-95 முகக் கவசத்தை ரூ. 22-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 3 வெவ்வேறு சர்ஜிகல் முகக் கவசங்களை முறையே ரூ. 3, ரூ. 4, ரூ. 4.50-க்கு விற்க வேண்டும். 200 மில்லி சானிடைசர் ரூ. 110-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.