சென்னை:
சிவசங்கர் பாபா வழக்கில் திடீர் திருப்பமாக அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி சுஷ்மிதாவை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் சுசில் ஹரி இன்டர்நேசனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை நிறுவியவர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா (78). இவரது பள்ளியில் படித்த 3 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார்கள் அடிப்படையில் 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள் ளது. இதில் 2 வழக்குகள் போக்சோ சட்டப் பிரிவை அடிப்படையாக கொண்டவை.இந்த வழக்குகளில்தான் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவசங் கர்பாபா மீது அவரது பள்ளியில் படித்து, அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வெளிநாடுகளில் தற்போது வாழும் முன்னாள் மாணவிகள் சிலரும் பாபா மீது புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.சிவசங்கர் பாபா மீதான வழக்கில்அதிரடி திருப்பமாக அவரது பெண் சீடர் சுஷ்மிதாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.சென்னையைச் சேர்ந்த இவர் சிவசங்கர் பாபாவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் என்றும், மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவின் காம விளையாட்டுகளுக்கு இவர்தான் அனுப்பி வைப்பார் என்றும் புகார் கூறப்பட்டது.
புகார் கொடுத்துள்ள 3 முன்னாள் மாணவிகளில் ஒருவர், சுஷ்மிதாதான் என்னை பெரிய ஆளாக கொண்டுவருவதாக ஆசை காட்டி, பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில் சுஷ்மிதாவும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.சிவசங்கர் பாபா வழக்கில் கைதான அவரது சீடர் சுஷ்மிதா, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஆவார். பட்டப்படிப்பு படித்துள்ள அவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தவர். அவருக்கு பள்ளி வளாகத்திலேயே பாபா ஒரு வீடு கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் சுஷ்மிதா திருமணம் ஆன பிறகு கணவருடன் சென்னையில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவருக்கு 6 மாத கைக் குழந்தை உள்ளது. குழந்தையை கணவர் மற்றும் தாய்-தந்தையிடம் சுஷ்மிதா விட்டுள்ளார்.அந்த சொகுசு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சென்ற காவலர்கள் மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு பொருத் தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான வீடியோ காட்சிகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மீண்டும் அந்த பங்களாவில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு பெண் கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது திங்கட்கிழமை விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. சிவசங்கர் பாபா மீது தொடர்ந்து திடுக்கிடும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.