tamilnadu

img

கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமையுமா? 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திற னாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோ ருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் வரிசை, முக்கிய பிரமுகர்கள் வரிசை, கட்டண வரிசை என தனித்தனியாக வரிசைகள் அமைக்கப் பட்டுள்ள போதும், மாற்றுத்திற னாளிகளுக்காக தனி வரிசை ஏதும் இல்லை எனக்கூறி சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர்கள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது சாய்தள பாதை வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், கோவில் வாசலை தாண்டிச் செல்ல முடியாத நிலை உள்ளதாகக் குறிப் பிட்டுள்ளார்.மேலும், கண் பார்வை இல்லாதமாற்றுத் திறனாளிகள் கோவில் களை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வதற்கு பிரெய்லி முறையில்கோவில்களில் உள்ள கல்வெட்டு களை அமைக்க வேண்டும் எனவும்மனுவில் கோரிக்கை விடுத்துள் ளார்.கோவில்களில் சாய்தளப் பாதை அமைக்க வேண்டும். சக்கர நாற்காலி வசதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி டிக்கெட் வரிசை, தரிசன வரிசை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விடுத்துள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மிக முக்கியமான பிரச்சனையை மனுதாரர் நீதிமன்றத்துக்கு எடுத்து வந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரங் களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.