tamilnadu

img

15 நாட்களாக  தண்ணீர் இல்லை   பொதுமக்கள்  போராட்டம்

 ஆலந்தூர்,ஜூன் 20- ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு குடிநீர்வந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது. இந்தநிலையில் ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவில் உள்ள ராட்சத குடிநீர் டேங்கில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக வியாழனன்று (ஜூன் 20) காலை லாரிகள் வந்தன. அவற்றை பார்த்ததும் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். வீட்டு இணைப்புகளுக்கே குடிநீர் வினியோகிக்காமல் லாரிகளில் தண்ணீர் பிடித்து எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கூறி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து குடிநீர் டேங்க் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.