ரசாயன மாம்பழங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
சென்னை, ஏப்.29- ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாது காப்புத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை, குடோன்களில் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய சோதனை நடத்த உணவு பாது காப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளி லிருந்து வரக்கூடிய ரசாயன பவுடர் மற்றும் ஸ்பீரே உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட சுழலில் அத்தகைய பொருட்களின் விற்பனை யையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக பங்கனப்பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வரும் நிலையில் செயற்கை முறையில் ரசாயனம் கலந்து பழங்களை பழுக்க வைப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள சூழலில் இத்தகைய சோதனையை தீவிரப்படுத்துமாறு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுப்பாது காப்புத்துறையின் தர சட்டத்தின்படி பழங்கள் தரமாக இல்லாத பட்சத்தில் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்வது டன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.