சென்னை,நவம்பர்.05- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரேஷன் மூலமும் மற்ற பகுதிகளுக்கு இன்று டோக்கன் வழங்கப்பட்டு படிப்படியாக ஓரிரு நாட்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் வருவாய்த் துறைச் செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.