tamilnadu

60 நாட்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்....

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடை காலம் முடிந்ததால் மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த காலத்தில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மீன்பிடிக்க தடை விதிக் கப்படுகிறது. இந்த ஆண்டும் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி தொடங்கியது. இதனால் கடற்கரை கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டு உள்ள சிறு, சிறு பழுதுகளை சீரமைத்தல், பெயிண்ட் அடித்தல், சேதம் அடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த 61 நாள் தடை காலத்தில் மீன் வரத்து குறைந்ததால் மீன் விற்பனை விலை பல மடங்கு அதிகரித்தது.

தடைக் காலம் முடிவடையும் தருவாயில் படகுகள் பழுது பார்ப்பு பணிகள் பெரும் பாலும் முடிக்கப்பட்டு படகுகளை இயக்கி வெள்ளோட்டம் பார்த்தனர். அதன்படி மீன்பிடி துறைமுகம் பகுதியில் சிறிது தூரம் படகை ஓட்டிப்பார்த்தனர்.இதற்கிடையில் இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூபாய் 5000 அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்பட்டது.மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதி திங்களன்று முடிவடைந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுழற்சி முறையில் படகுகள் இயக்கப்பட்டன.தற்போதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் சுழற்சி முறையில் படகுகள் இயக்கப் படுமா, அல்லது அனைத்து படகுகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுமா என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. ஆனாலும் மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.