tamilnadu

img

மீன்பிடி மசோதா 2019ஐ திரும்பப் பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, அக். 3- மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மீன்பிடி மசோதா 2019ஐ திரும்பப்  பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு மீன் பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலா ளர் எஸ்.அந்தோணி தலைமை யில் நிர்வாகிகள் ஆர்.லோக நாதன், வி.வைத்திலிங்கம், எம். கருணாமூர்த்தி, எஸ்.ஜெய்சங் கர், சி.என்.ஆர்.ஜீவானந்தம், ஆர். பேச்சிமுத்து, எஸ்.சுப்பிரமணி யம், ஜி.சித்ரா ஆகியோர் சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர், மீன்வளத்  துறை அமைச்சர், மீன்வளத்துறை  அரசு செயலாளர், இயக்குநர் மற்றும் ஆணையர் ஆகியோரி டம் வியாழனன்று (அக். 3) மனு அளித்தனர். பின்னர் இது குறித்து எஸ்.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கடல் மீன்பிடி (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதா 2019, கடல் சட்ட ஐக்கிய நாடுகள்  பிரகடனம் 1982 மற்றும் உலக  வர்த்தக ஒப்பந்தங்கள் அடிப்படை யில் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் மீன்  பிடி கொள்கையில் உறுப்பு நாடு கள் அனைத்தும் சிறிது சிறிதாக மீனவர்களுக்கு கொடுக்கும் மானி யங்களை குறைத்து 2,020க்குள் முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி யில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்தே 12 நாட்டிக்கல் மைல் தூரத்திலிருந்து 200 நாட்டிக்கல் மைல் தூரம் வரை பாரம்பரிய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களால் ஒட்டு மொத்த மாக எதிர்த்து தூக்கியெறியப் பட்ட டாக்டர் மீனா குமாரியின் பரிந்துரைகளை மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்த மசோதா வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதார உரிமைகளை பாது காக்கும் டாக்டர். முராரி கமிஷன்  பரிந்துரைகளை அரசு முற்றிலு மாக புறந்தள்ளிவிட்டு, பெரு முத லாளிகள், பெரும் நிறுவனங்கள் முற்றிலுமாக கடல் வளத்தை ஆளுமை செய்யும் விதமாக இந்த மசோதா கொண்டு வந்துள்  ளது. இம்மசோதாவின் மூலம் மீன்பிடி மற்றும் கடல்சார் கட்டுப் பாடு அதிகாரத்தை 13 கடலோர மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு தட்டிப் பறிக்கும் முயற்சியாகும். வெளிநாட்டு நிறு வனங்கள் மற்றும் கப்பல்களுக்கு  மறைமுகமாக அனுமதி வழங்கும்  திட்டம் இந்த மசோதவில் காணப்  படுகிறது. பசுமை புரட்சி என்ற பெயரால் விவசாயத்தை அழித்தது போன்று நிலப் புரட்சி என்ற பெயரில் மீன்பிடி விவசாயம் செய்யலாம் என்ற கட்டுப்பாடு விதித்தால், 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் பராம்பரிய மீனவர்கள் எந்த மீன்வளமும் இன்றி வாழ்வாதாரம் முற்றிலு மாக பாதிக்கப்படும் நிலை உரு வாகும். 12 நாட்டிக்கல் மைல் முதல்  200 நாட்டிக்கல் மைல் வரையும், உயர் கடல் பகுதிகளில் பெரும்  பகாசுர நிறுவனங்கள் கடல் வளத்தை மொத்தமாக கபளீகரம்  செய்யும் நிலை உருவாகும். 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை  தாண்டி மீன்பிடிக்கும் மீன்பிடி கலன்களை உடனடியாக அதி காரம் வழங்கப்பட்ட அதிகாரி கள் கைப்பற்றிக் கொண்டு செல்ல வும், மீனவர்களை கைது செய்ய வும், அபராதம் விதிக்கவும், 6 மாதம் வரை சிறையிலடைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கி றது. மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்த கடலோர பாது காப்பு படைக்கு அதிகாரம் கொடுக்கவும் இந்த மசோதாவில் வழிவகை உள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரி களை மீனவர்கள் தடுத்ததாகவும்,  தகராறில் ஈடுபட்டதாகவும் கூறி  வழக்குப் பதிவு செய்து ஒரு வருட  சிறை தண்டனை வழங்கவும், அபராதம் விதிக்கவும், இரண்டும் சேர்த்து வழங்கும் விதமாக இந்த  மசோதா அமைந்துள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப் பட்டால் மீனவ மக்களிடம் இருந்து  இயந்திர அனுமதி, வள்ள அனு மதி, விசை படகு அனுமதி, வலை  அனுமதி, மீனவர் அனுமதி என்று  வருவாய்க்கு மிஞ்சிய  தொகையை கட்டணங்களாக வும், வரியாகவும் வசூலித்து மீன வர்களுக்கு ஒரு மிகப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி பாரம் பரிய மீனவ மக்களை மீன்பிடித் தொழிலையே விட்டுச் செல்லும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே மாநி லங்களின் உரிமையை பறிக்கும் மக்கள் விரோத, மீனவர் விரோத  கருப்பு மசோதாவை முற்றிலு மாக நிராகரிக்க தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஓமன் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க  வலியுறுத்தல்

கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) ராமேஸ்வரம் மாவட்டச் செயலாளர் எம்.கரு ணாநிதி சென்னையில் மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து  வியாழனன்று (அக். 3) மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் நம்புதாளை மீனவ கிரா மத்தைச் சார்ந்த மீனவர்கள் ஜி.கார்மேகம் (50), டி.ராமநாதன் (38), கே.காசி லிங்கம் (35), ஆர்.காசிலிங்கம் (23), குமரி மாவட்ட மீனவர் ஏ.சிலுவைதாசன் உள்ளிட்ட 5 தமிழக மீனவர்கள் மற்றும் மேற்கு வங்க மாநில மீனவர்கள் 3 பேர்  உள்ளிட்ட 8 மீனவர்கள் ஓமன் நாட்டில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்றவர்கள்  கடந்த 16.9.2013 அன்று மசீரா என்ற தீவிலிருந்து அப்துல்லா ஹமிது என்பவ ருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் இயற்கை சீற்றத்தில்  சிக்கிக் கொண்டு இன்று வரை கரை திரும்பவில்லை. இது சம்மந்தமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதி காரிகளிடமும் கடந்த 27.9.2019 அன்று முறையாக மனு செய்துள்ளோம். ஆனால்  ஓமன் நாட்டில் எங்கள் மீனவர்களை தேடுதல் நடவடிக்கை முறையாக நடை பெறவில்லை என அறிகிறோம். மேலும் தற்போது தேடுதல் நடவடிக்கை நிறுத்தி யுள்ளதாகவும் அறிகிறோம். இதனால் நமது மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத சூழல் உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு நமது தூதரகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, காணாமல் போன நமது மீனவர்களை மீட்டுத் தருவதுடன், பாதிப்புக்குள்ளான மீனவர் குடும்பங்களுக்கு தமிழக முதல்வரின் பொது நிவராண நிதியில் இருந்து குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.