சென்னை:
தமிழக கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களில் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசு கடந்த10.6.2021 அன்று வெளியிட்டுள்ள உயர்கல்வித் துறை பற்றிய ஆய்வறிக்கையில் பல்வேறு விபரங்களோடு இந்தியா முழுவதும் கல்லூரி ஆசிரியர்கள் மற் றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் சமூக விகிதம் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விபரங்களில் தமிழக கல்லூரிகளில் ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் நியமனங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் விகிதம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 18+1 சதவிகிதத்தை விட மிகவும்குறைவானதாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்திருக்கிறது.
இந்த விபரங்கள் இந்த அறிக்கைக்காக பதில் கொடுத்த கல்லூரிகளில் உள்ள விகிதம் மட்டுமே. மேலும், இவை அனைத்தும் அரசு கல்லூரிகள் பற்றியதுமட்டுமல்ல, தனியார் கல்லூரிகளும் இந்த மதிப்பீட்டிற்குள் அடங்குகின்றன. ஆயினும் இந்த அறிக்கையிலுள்ள விபரங்களின்படி பட்டியல் சாதியினருக்கான விகிதம் மிக மிககுறைவாக உள்ளது. இவற் றைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 18+1 என்கிற அளவிற்காவது உத்தரவாதப்படுத்த அரசு ஆய்வு மேற்கொண்டு சரி செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட் டிற்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அரசு ஒதுக்கீட்டில் அல்லாமல் கல்லூரி படிப் பில் சேரும் பட்டியல் சாதி மாணவர்களுக்கும் அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயின்றாலும் பட்டங்களை வழங்குவது அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களே. இதைத் தவிர பல்வேறு விதமான சலுகைகளையும் உதவிகளையும் தனியார் கல்லூரிகள் அரசிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன.
எனவே, தனியார் கல்லூரிகளும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர் களின் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.