சென்னை:
பெண் போலீஸ் எஸ்.பி.யைபாலியல் துன்புறுத்தல் செய்ததாககுற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்என்றும் விசாரணை முறையாக நடைபெற தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டிருப்பதும், பாலியல் தொல்லைக்கு உள்ளானவர் ஒரு பெண்ஐபிஎஸ் அதிகாரி என்பதும் தமிழகத்தில் பெண்கள் நிலைமையை தோலுரித்துக் காட்டுகிறது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு பெண் எஸ்பி, அத்துறையின் உயர் அதிகாரி மீது கொடுத்த புகாரின் மீது இறுதிக் கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலைதான் மேலும் மேலும் பாலியல் குற்றங்கள் செய்யப்படுவதற்கு ஊக்கமளிக்கிறது. உண்மை இப்படி இருக்கும்போது, தமிழகம் பெண்கள் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது என்று அரசு கொடுக்கும் விளம்பரம் கேலிக்கூத்துதான். காவல் துறையில்பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டா லும், அரசு கண்ணை மூடிக் கொள்ளும்என்றால் சாதாரண மனிதர்களின் கதி என்ன?இதை வன்மையாக கண்டிப்பதோடு சட்டப்படி புகார் கமிட்டி அமைத்து, குறுகிய காலத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
இவர் வாடிக்கையாகவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக வரக்கூடியஊடகச் செய்திகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். விசாரணை முறையாக நடக்க ஏதுவாக உடனடியாக அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யவும் வற்புறுத்துகிறோம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்அதிமுகவினர் கைது செய்யப்பட்டி ருப்பதை தொடர்ந்து, முதல்வரின் சுற்றுப்பயணத்தை ஒட்டிய தருணத்தில் காவல்துறை உயரதிகாரியால் பாலியல் குற்றம் நடந்திருப்பது அதிமுக கட்சி மற்றும் அரசின் தன்மையைவெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வீடு, வீதி, வேலை தலம் என அனைத்துஇடங்களிலும் கண்ணியத்தோடு வாழ்வதற்கான பெண்களின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. இதற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து களத்தில் இருக்கும் என உறுதி கூறுகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.