tamilnadu

img

செப்.28 போராட்டத்தில் விவசாயிகள் சங்கம் பங்கேற்கிறது

சென்னை;
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 28 ஆம் தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள  ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட்களிடம் அடகு வைக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 28 அன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக மற்றும்தோழமைக் கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்கிறது.திண்ணுகிற சோற்றில் மண் அள்ளிப்போடும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்களுக்கு உணவு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும்விவசாயிகளுக்கு விரோதமான இந்தசட்டங்களை ஆதரித்து மாபெரும் வரலாற்று தவறை அதிமுக செய்திருக்கிறது. தங்களது சுயலாபத்திற்காக விவசாயிகளுக்கு துரோகமிழைத்திருக்கிறது அதிமுக. எனவே, மத்திய– மாநில அரசுகளுக்கு தமிழக விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.