tamilnadu

img

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது.

நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தென் மாநிலங்களில் பெரிதாக வெற்றிபெற முடியாத பாஜக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாக, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்ற சூழ்ச்சித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்பதைக் காரணமாக காட்டி, அதற்கேற்ப, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துவது, மறுபுறத்தில் அதே மக்கள் தொகையையே காரணமாகக் காட்டி தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்று திட்டமிட்டு வருகிறது.

எனவே, பாஜகவின் தொகுதி குறைப்பு சூழ்ச்சியை முறியடிக்கவும், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவதை உறுதி செய்யவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆளாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கடந்த 7-ஆம் தேதி இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தோடர்பான  கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் உட்பட 7 மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.