சென்னை, ஜூன் 6- வெங்காயம், பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட் களை அத்தியாவசியப் பட்டி யலிலிருந்து நீக்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அர சுக்கு தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு கோரிக்ககை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேர மைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கையில், வெங்காயம், பருப்பு, உருளை மற்றும் உணவு தானியங்கள் சில வற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி இருப்பது அபாயகர மானது. மேலும் நீக்கப்பட்ட பொருட்களை வைத்திருப்ப தற்கான அளவீடும் விலக்கிக் கொண்டுள்ளது. இது நுகர் வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவ டிக்கையால், பெரும் முத லீடு வைத்துள்ள கார்ப்ப ரேட் முதலாளிகள், விவசாய விளைபொருள் சாகுபடி காலங்களிலேயே அவற்றை வாங்கி குவித்து வைத்துவிடு வார்கள். மேலும் அறுவடை முடிவடைந்த பின், பொருட் களை பதுக்கி, செயற்கை யான முறையில் விலை வாசி உயர்வை ஏற்படுத்து வார்கள். எனவே, முக்கிய மான உணவுப் பொருட்களை அத்தியாவசியப் பட்டியலி லிருந்து நீக்கியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.