திருத்தணி, மே 21 - இருளில் தவிக்கும் பகத்சிங் நகர், இருளர் காலனி மக்களுக்கு மின்சார வசதியை ஏற்ப டுத்தி தருவதாக திருத்தணி சட்டமன்ற உறுப்பி னர் பி.எம். நரசிம்மன் உறுதி அளித்தார். ஊரடங்கையொட்டி திருத்தணி ஒன்றி யம் தாடூர் இருளர் காலனி மற்றும் பகத்சிங் நகர் இருளர் காலனியில் வசிக்கும் 80 குடும் பங்களுக்கு திருத்தணி சட்டமன்ற உறுப்பி னர் பி.எம். நரசிம்மன் நிவாரணப் பொருட் களை வழங்கினார். அப்போது பேசிய நரசிம்மன், பகத்சிங் நகர் இருளர் காலனி மக்களுக்கு மின்சார வசதி, குடிசைகளுக்கு பட்டா மற்றும் தொகுப்பு வீடு கள் கட்டிதருவதாகவும், தெருமின் விளக்கு களை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக அமைத்து தருவதாவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் திருத்தணி வட்டாட்சியர் உமா, தாடூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பி னர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி மாவட்டகுழு உறுப்பினர் அந்தோணி, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.