tamilnadu

img

மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது: மின்சார வாரியம் எச்சரிக்கை  

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக மின்வாரியமும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வருகிற மார்ச் 28, 29 நாடு முழுவதும் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.  

இந்த நிலையில் வருகிற 28,29 ஆகிய தேதிகளில் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்க வேண்டும். தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடக்கூடாது. அன்றைய தினம் யாருக்கும் விடுப்பும் கிடையாது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழிர்களுக்கு சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    

அதனைதொடர்ந்து மின்சார வாரிய துறையும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.