tamilnadu

img

மார்ச் 31-ல்  விடைத்தாள்  திருத்தும் பணி

சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம்தேதி வரை நடைபெறும்என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கியது.  வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவுபெற்று ஏப்ரல்24 ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மதிப்பெண்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள்ளாக இணையதளத்தில் பதிவேற்றி அன்றைய தினமே மதிப்பெண் பட்டியல் குறுந்தகடை தேர்வுத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.