திருவண்ணாமலை, செப். 13- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் பரா மரிப்பு உப கோட்ட அலுவ லகம் முன்பு தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரிய தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு தலை வர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் இரா.பாரி, மாவட்ட துணைத் தலைவர் வெ. சங்கர், கோட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் டி. கந்தன்மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செய லாளர் இரா. சரவணன், மாவட்ட பொதுச் செயலாளர் கே. செல்வம் ஆகியோர் உரையாற்றினார். ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு ஷெட்யூல் ஆபரேட் படி, சம்பளத்தை வங்கி மூல மாக வழங்க வேண்டும், மேல்முறையீடு செய்துள்ள தொகுப்பூதிய தொழிலாளர் வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும், பராமரிப்பு உதவியாளர்க ளுக்கு தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில், பணி செய்தமைக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், தொகுப்பு ஊதி யத்தில் இருந்து நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலா ளர்களுக்கு பென்ஷன் கணக்கு துவங்கவேண்டும், நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.