டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை 2016ம் ஆண்டிலிருந்து “டாக்டர் வா.செ.குழந்தைசாமி மேம்பாட்டு விருது” எனும் இவ்விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
தமிழ் மேம்பாட்டு விருதின் சாரம்
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், அகழ்வாய்வு, பல்தொழில் துறைகளில் பயன்படுத்தியும் ஆனால் அகராதிகளில் இதுவரை இடம் பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழி சீர்திருத்தம், சமுதாய சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் மேற்கண்ட பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்ந்தெடுக்கப்படுகின்ற நூலின் படைப்பாளிக்கு, மேற்படி விருதுடன் ரூ.30, ரூ.20. ரூ.10 ஆக மூன்று பரிசுகளும் வழங்கப்படும்.
நிபந்தனைகள்
1. நூல் படைப்பு 2018ஆம் ஆண்டிலானதாக இருக்க வேண்டும்.
2. நூலின் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.
3. நூலை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள்: 30.6.2019
விருதும் பரிசுகளும் வழங்கும் நாள் : 21.07.2019
நூல் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:
ப.தங்கராசு, தலைவர்,
டாக்டர் வா.செ.குழந்தைசாமி,
கல்வி ஆய்வு அறக்கட்டளை
தமிழ் மேம்பாட்டு விருது
5.45, எல்.ஆர்.ஜி. நகர்,
ஆண்டாங்கோவில் கிழக்கு,
கரூர்- 639008