tamilnadu

img

ஆதரவற்ற சிறார் இல்லத்துக்கு டாக்டர் சூர்யா அறக்கட்டளை சலவை இயந்திரம்

சென்னை, மார்ச் 15- சென்னை சேத்துப்பட்டு உண்டு உறைவிடப் பள்ளி யில் தங்கிப் படிக்கும் ஆதர வற்ற சிறார்களுக்கு டாக்டர் சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. எல்ஐசியின் கோட்ட முதுநிலை மேலாளர் எம்.கே.கருப்பையாவின் மகள் டாக்டர் சூர்யா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திடீ ரென உயிரிழந்தார். அவரது நினைவாக டாக்டர் சூர்யா பெயரில் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். டாக்டர் சூர்யாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி சேத்துப்பட்டில் இயங்கி வரும் உண்டு உறை விட நடுநிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தப் பள்ளியில் பெற்றோர் இல்லாத, தாய் அல்லது தந்தையை இழந்த, வீடு இல்லாமல் தொரு வோரங்களில் வசிக்கும் மக்களின் பெண் குழந்தை கள் தங்கி படிக்கின்றனர். இங்கு தங்கியுள்ள 70க்கும் மேற்பட்ட பெண் குழந்தை களின் துணிகளை கைக ளால் துவைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இதையடுத்து குழந்தை களின் பள்ளிச்சீருடை உள்ளிட்ட துணிகளை எளி தாக துவைக்கவும், தண்ணீர் சிக்கனமாக பயன்படும் வகையில் அவர்களுக்கு துணி துவைக்கும் சலவை இயந்திரம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இதனை போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் டி.கே.ராஜசேகரன், எல்ஐசி முதுநிலை கோட்ட மேலா ளர் கருப்பையா ஆகியோர் ஊழியர்களிடம் வழங்கினர். இதில் சூர்யா அறக்கட்டளை நிர்வாகி கே.மகமாயி, ரெயின்போ பவுண்டேசன் தொண்டு நிறு வன மாநில ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் சுசீலா, இல்ல பொறுப்பாளர் சரளா, எல்ஐசி முன்னாள் வளர்ச்சி அதிகாரி சுந்தர்ராஜன், எச்எல்எப் முகவர்கள் ரங்க சாமி, கருணாகரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.