திருப்பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு-வுக்கு வாக்களிக்க கோரி ஆலந்தூர் பகுதி, இரண்டாம் கட்டளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வீ.கலாநிதியை ஆதரித்து திருவொற்றியூர் 4வது வட்டம் ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், பகுதிக்குழு உறுப்பினர் கருணாநிதி, கிளைச் செயலாளர்கள் குமார், அலமேலு மற்றும் திமுக, விசிக, காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.