tamilnadu

தி.மு.க. பொருளாளர் மருத்துவமனையில் துரைமுருகன்

சென்னை:
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துரைமுருகன் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்புஇருதய அறுவை சிகிச்சைசெய்து கொண்டவர். அவருக்கு அடிக்கடி ரத்தஅழுத்தம், சளித்தொல்லை, மூச்சுத் திணறல் வருவதுவழக்கம். உடனே அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடுதிரும்புவார். புதன்கிழமை(நவ.6) அதிகாலையில் துரைமுருகனுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல் சோர்வானது. மூச்சு விட சிரமப்பட்டார். உடனே அவரது உதவியாளர்கள் குடும்ப மருத்துவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.