tamilnadu

img

சென்னை – மூடப்பட்ட நிறுவனத்தின் கழிவறையில் சடலமாக கிடந்த இளம் ஜோடிகள்

குன்றத்தூர் அருகே செயல்படாத கம்பெனியில் அழுகிய நிலையில் இளம் ஜோடிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிட்கோவில் கடந்த 2019 ஆம் ஆண்டு செயல்பட்டு வந்த கம்பெனி ஒன்று தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானதில் இரண்டு ஆண்டுகள் செயல்படாமல் இருந்தது. காவலாளி ஒருவர் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அந்த கம்பெனியின் மேனேஜர் கம்பெனியில் ஒரு பகுதியில் உள்ள பணியை செய்வதற்காக ஆட்களுடன் வந்துள்ளார். அப்போது 3வது மாடியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சென்று பார்த்துபோது அங்குள்ள கழிவறையில் ஒரு சடலமும் மற்றொரு கழிவறையில் இன்னொரு சடலமும் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

தகவலறிந்து வந்த போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்தது 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.