விழுப்புரம், ஜூலை 1- ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் என்.குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தனசேகரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பி.குமார், செயலாளர் எஸ்.முத்துக்குமரன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாறுத லில் வெளிப்படைத் தன்மையை கடைப் பிடிக்க வேண்டும், இளநிலை உதவியாளர் பணி நியமனத்தில் டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு 50 விழுக்காடு சீனியாரிட்டி அடிப்படை யில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டன. இதில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கண பதி, பொருளாளர் வி.சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.