திருவண்ணாமலை ஜன 2- திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் பணி யாற்றும் உதவி காவல் ஆய்வாளர் முருகதாஸ். திருவண்ணா மலை சண்முகா மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். புதனன்று(ஜன.1) இரவு 11 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். உடனடியாக அவரது பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது.