சென்னை:
முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான மைதீன்கான் மகன் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 55.திமுக முன்னணி நிர்வாகிகளுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.இவரது மகன் காஜா பீர் முகமது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே உடல் நிலை மேலும் நலிவுற்றதால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளியன்று (மே15) மரணமடைந்தார்.தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. காஜா பீர் முகமதுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என் பதை கண்டறிய பரிசோதனைகள் நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.