tamilnadu

img

6,7,8ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் குறைப்பு

சென்னை, பிப்.10-
6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 
இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. முன்னதாக, 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 40% அளவுக்குக் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டது.
இந்நிலையில், 6,7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% அளவுக்குப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
மேலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த முழுத் தகவல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.