சென்னை, மே 13-சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு (26). இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (28), பாரதி ராஜா (26), பாவாடை ராஜன் (22). இவர்கள் 4 பேரும் ஞாயிறன்று இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றுள்ளனர். சாந்தோம் பாபநாசம் சிவன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென்று மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் விஷ்ணு, வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். பாரதிராஜா, பாவாடை ராஜன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.