tamilnadu

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்...

ரூபாய் இழப்பீடு, அரசு வேலை  அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

கவலைக்கிடமான பொருளாதாரம்
தமிழக அரசின் நிதிநிலைமை கோவிட் 19க்கு முன்னரே மிகுந்த நெருக்கடியில் இருந்தது. மத்திய அரசின் பங்களிப்பும் திருப்திகரமாக இல்லை. 2019-20ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ. 14,314.76 கோடியிலிருந்து திருத்த மதிப்பீடுகளின் படி ரூ. 25,071.63 கோடியாக, ஏறக்குறைய 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில் 2020-21ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்ட மதிப்பீட்டுக்கும் நடைமுறைக்கும் மிகப்பெரும்  இடைவெளியே ஏற்படும். கடன்சுமை உயரும். எனவே தமிழக பொருளாதார நிலைமை கவலைக்கிடமாகவே தொடரும் அபாயம்உள்ளது.

வேலையின்மையும், வன்முறையும்

இவ்வருடம் ஏப்ரல் இறுதியில் வேலையின்மை விகிதாச்சாரத்தில் 50 சதவிகிதத்தோடு தமிழகமே முதலிடத்தில் நிற்கிறது. மே இறுதியில் இது 33 சதவீதமாக குறைந்தாலும் தேசிய சராசரியை விட அதிகம் என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறுகிறது. பெண்கள், குழந்தைகள், தலித்மக்கள், பழங்குடி இனத்தவர் சந்திக்கும் பிரச்சனைகளும், அவர்கள் மீதான வன்முறையும்  அதிகரித்துவருகின்றன.  வேலையிழந்து, வருமானமிழந்து, வாழ்வை இழந்து வாடும் தமிழக மக்களுடைய தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு  போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. தேவையான நிதியை மத்திய அரசிடம் வாதாடிப் பெறுவதற்கு கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறது. இன்றைய நெருக்கடியை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சிகள், நிபுணர்களின் ஆலோசனையை பெற தமிழக அரசு முன்வர வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,விவசாயம், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கும், சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாப்பதற்கும் கூடுதலான நிதி மற்றும் திட்டமிடல் வேண்டுமென்பதை கோவிட் 19-ன் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.